» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் தகவல்!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:37:26 PM (IST)



எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சி இடம் பெற்றிருந்ததற்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில், முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ள எம்புரான் படம் தமிழில் வெளியாகி தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த காட்சி நீக்க வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்: நான் அந்த படத்தை பார்க்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் சொல்லும் போது ஒரு பக்கம் பயமும் கோபமும் தான் வரும். இப்படிப்பட்ட நிகழ்வு செய்து இருந்தால் தேவையற்ற நிகழ்வு அந்தத் திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை எழலாம். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்சாரில் முதலில் இந்த காட்சி கட் செய்யபட வில்லை. படம் வெளியான பின்னர் இந்த செய்தி வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிக்கபட்டு அந்த காட்சி நீக்கபட்டு உள்ளது. எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. இவ்வாறு விவாதம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory