» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறிப்பு : போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:08:13 PM (IST)
கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறித்ததாகக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெட்டி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த் துறையினர் மரங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையறிந்த அரியலுார் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏ.நெப்போலியன் (45) தான் ஆய்வாளர் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது உறவினர் எனவும், வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகவும், அதற்கு ரூ.1 கோடி தருமாறு கூறி ரவிச்சந்திரனிடம் இருந்து பெற்றுள்ளார். மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நெப்போலியனை கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:37:26 PM (IST)

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:59:06 PM (IST)

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:55:48 PM (IST)

இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக: ஹெச்.ராஜா ஆவேசம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:54:10 PM (IST)

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் : நடிகர் சரத்குமார் வரவேற்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:25:08 PM (IST)
