» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். நேற்று கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இதனால் வாய்தாவுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தனசேகர் டேவிட் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory