» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை விவரங்களை ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல: இபிஎஸ் குற்றச்சாட்டு

வியாழன் 20, மார்ச் 2025 4:03:47 PM (IST)

"கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும்?" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்..

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை சேலம், ஈரோடு, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது குறித்து பேச தொடங்கிய போது, முழுமையாக பேசுவதற்கு நேரம் ஒதுக்காமல் பேரவை தலைவர் வாய்ப்பு மறுத்தார். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு பேரவையில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் எதற்காக உள்ளே இருக்க வேண்டும் எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி, பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளபோது, அந்த உரிமை தற்போது மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். நேற்றைய சட்டப்பேரவையில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் குறித்து பேசியபோது, இனி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நடைபெறாது என்றும், அதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விளக்கம் அளித்த அன்றே, ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தடுத்து நிறுத்தாமல், திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டினார்.

குற்றம் நடந்தால் கைது செய்வோம் என்று கூறுவதற்கு அரசாங்கம் எதிர்க்கு என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மூன்று மாதமாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, புகார் அளித்தவரையே காவல்துறை அதிகாரிகள் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றம் சாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory