» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது : சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை
வியாழன் 20, மார்ச் 2025 4:56:21 PM (IST)
சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது. அவர் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்தவேண்டும்; மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்ச நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக்கூறியபடி பேச வாய்ப்பு கேட்டு அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி நடந்துவந்து கை நீட்டி பேசிய தவாக உறுப்பினர் வேல்முருகனால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வேல்முருகன் அவை விதியை மீறி நடந்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. பேரவையில் வேல்முருகன் பேசினால் நான் அவையில் அமர்ந்து கேட்பேன், நல்ல கருத்துகளை கூறுவார். வேல்முருகன் தற்போது அதிகபிரசிங்கித் தனமாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
வேல்முருகன் ஒருமையில் பேசியது மற்றும் அமைச்சர்களை கை நீட்டி பேசியதை ஏற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். த.வா.க. உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை; வேல்முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இறுதி எச்சரிக்கை மட்டுமே விடுக்கிறோம். வேல்முருகன் தனது செயலை திருத்திக் கொள்ள வேண்டும். இது போல இனிமேல் யாராவது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி வீட்டை முடக்குவதா? பிரபு கைவிரிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:41:03 PM (IST)

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி மதிப்பில் திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:25:09 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:49:04 PM (IST)

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் - முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:40:37 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)
