» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடங்குகிறது!

வியாழன் 20, மார்ச் 2025 5:26:26 PM (IST)

கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு வாராந்திர ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை துவங்குகிறது. 

கன்னியாகுமரியில் இருந்து சார்லபள்ளிக்கு செல்லும் வாராந்திர ரயில் வியாழன் காலை 9.15க்கு புறப்பட்டும். அதேபோல் மறுமார்க்கத்திலும் சார்லபள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர ரயில் வியாழன் மாலை 3.45க்கு புறப்படும். இந்த நிலையில் கோடைகால பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது:-

கன்னியாகுமரியில் இருந்து சார்லபள்ளிக்கு செல்லும் (வண்டி எண். 07229) வாராந்திர சிறப்பு ரயில் வருகிற ஏப்ரல் - 04, 11, 18, 25, மே - 02, 09, 16, 23, 30, ஜூன் - 06, 13, 20 27, ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 05.15 மணிக்கு புறப்பட்டும். என ரயில்வே அறிவித்துள்ளது.

மறுமார்க்கத்தில் சார்லபள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் (வண்டி எண். 07230) வாராந்திர சிறப்பு ரயில் வருகிற ஏப்ரல் - 02, 09, 16, 23, 30. மே - 07,14, 21, 28 , ஜூன் - 04, 11, 18 , 25 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இரவு 9.50 மணியளவில் புறப்படும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 21.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த ரயிலானது கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக சார்லபள்ளிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory