» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்குனர் கோபி நயினார்
வியாழன் 20, மார்ச் 2025 5:43:38 PM (IST)
"தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது" என்று திரைப்பட இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவு ஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தர்பூசணி பழம் குறித்த மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:47:42 PM (IST)

ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி வீட்டை முடக்குவதா? பிரபு கைவிரிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:41:03 PM (IST)

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி மதிப்பில் திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:25:09 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:49:04 PM (IST)

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் - முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:40:37 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)
