» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துாத்துக்குடி மாவட்டத்தில் 10 சிப்காட் தொழிற்பூங்கா : சட்டசபையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!

வெள்ளி 21, மார்ச் 2025 12:31:38 PM (IST)

துாத்துக்குடியில் 10 சிப்காட் தொழிற்பூங்கா உருவாகும்; நடப்பாண்டில் ரூ.16,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை துவங்கும் என்றும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பேசுகையில், "குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள எழுவரைமுக்கி ஊராட்சி மற்றும் அதனை சுற்றி 800 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.

இங்கு ராக்கெட் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11,000 டன் வாழை விளைகிறது. இவற்றை பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலையை அமைத்து தரவேண்டும்.

இதற்கு பதிலளித்த பேசிய தொழில்துறை அமைச்சர் ராஜா: துாத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அற்புதமான சாலை, ரயில்வசதி உள்ளது. மிக முக்கியமாக துறைமுகம் வசதியும் உள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. இங்கு 3,800 ஏக்கரில் அமைந்துள்ள நான்கு சிப்காட் தொழிற்பேட்டைகளில் 108 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதிய சிப்காப்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள இடம் பிரதான சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

சாத்தியூகூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, சாதகமான சூழல் வரும்பட்சத்தில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்படும். துாத்துக்குடியை பொறுத்தவரை நான்கு சிப்காட் ஏற்கனவே உள்ளது. மூன்று புதிய சிப்காட்டிற்கு 5,000 ஏக்கரில் நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் மூன்று சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் உத்சேதம் உள்ளது. எனவே, துாத்துக்குடியில் மட்டும் 10 சிப்காட் தொழில்பூங்கா உருவாக்கும் வாய்ப்பு இந்த அரசிற்கு கிடைக்கும்.

துாத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய நிறுவனம் நடப்பாண்டிற்குள் தொழிற்சாலையை துவங்கும். அதன்வாயிலாக ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும். வாழை அதிகம் உற்பத்தியாகும்பட்சத்தில், அங்கு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

premMar 22, 2025 - 08:45:52 AM | Posted IP 104.2*****

no such a good train faciliity available !

ManiMar 21, 2025 - 11:48:44 PM | Posted IP 162.1*****

அற்புதமான சாலை ரயில் வசதி ?

தூத்துக்குடிMar 21, 2025 - 02:08:41 PM | Posted IP 172.7*****

டுபாக்கூர் ராஜா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory