» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜாமின் கையெழுத்து போட வந்த ரவுடி வெட்டிக் கொலை: காவல்நிலையம் அருகே பயங்கரம்!

வெள்ளி 21, மார்ச் 2025 12:42:09 PM (IST)

காரைக்குடியில் காவல்நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட சென்ற ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (23) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் மீது பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளது. கடந்த ஆண்டு கஞ்சா சிக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தார். பிணையில் வந்த அவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் வந்தவர்.

ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்தைவிட்டு வரும் போது இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் இவரை துரத்தியது. பைக்கில் முன்னாள் சென்றவர்களை காரில் இடித்து அங்கிருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து 100ஆடி சாலையில் ஓடிய நபரை மர்ம கும்பல் ஒன்று ரத்த வெள்ளத்தில் அவரை சரமாரியாக வெட்டி காரில் தப்பி சென்றது. இச்சம்பவம் காரைக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory