» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை ஏற்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சனி 22, மார்ச் 2025 11:17:07 AM (IST)

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பல மொழி, இனம் என பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.

கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும். மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory