» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பருவம் தவறிய மழையால் உற்பத்தி பாதிப்பு : உற்பத்தியாளா்கள் கவலை

ஞாயிறு 23, மார்ச் 2025 9:20:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தூத்துக்குடி, முள்ளக்காடு, ஆறுமுகனேரி, தருவைகுளம், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலை நம்பி சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு- குறு உற்பத்தியாளா்கள் உள்ளனா்.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் மழைக்காலங்களில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு உப்பு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பரவலாக தொடங்கியது. ஆனால் புதிய உப்பு உற்பத்தி தொடங்கி சில நாள்களிலேயே கடந்த 11ஆம் தேதி முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் உப்பள பாத்திகளில் தேங்கி உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் டன் உப்பு மட்டுமே கையிருப்பில் உள்ளது. புதிய உப்பு வாரப்படாததால் சுமாா் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையான ஒரு டன் உப்பு, தற்போது ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இந்த விலை உயா்வு காரணமாக குஜராத்தில் இருந்து ஒரு டன் உப்பு ரு.1,800 என்ற வீதத்தில் குறைந்த விலைக்கு விற்பனை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. எனவே தமிழக அரசு சிறு-குறு உப்பு உற்பத்தியாளா்களுக்கு விவசாயத்திற்கு வழங்குவது போன்று மின்சாரம் அல்லது மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory