» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு

திங்கள் 24, மார்ச் 2025 10:23:33 AM (IST)



பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்-நோயாளிகளை சந்தித்து, அவர்களின் உடல்நலம் மற்றும் சிகிட்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. 

உள்நேயாளிகளின் பரிசோதனை விவரங்கள், உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், 24 மணிநேர வெந்நீர் வசதி குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. 

மேலும் மருத்துவமனையில் பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகளை தினமும் மாற்றும் வேண்டும் எனவும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory