» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

திங்கள் 24, மார்ச் 2025 8:27:28 PM (IST)

இரணியல் அருகே  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்  தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்

குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி கிணற்றடி விளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (39), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக தனுஷ் மீது இரணியல் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். 

இந்த நிலையில் அவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து இந்திய குடியுரிமை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று இரவு தனுஷ், விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அவரை பிடித்த குடியுரிமை துறையினர், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் திருவனந்தபுரம் சென்று தனுசை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு பிறகு தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory