» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெற்கு தாமரைக்குளத்தில் நவீன மறுநில அளவை பணி நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல் !

செவ்வாய் 25, மார்ச் 2025 10:07:13 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மறுநிலஅளவை திட்டப்பணியில் DGPS கருவிகளை கொண்டு தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் நவீன மறுநிலஅளவை பணியானது 26.06.2023 முதல் 31.10.2023 வரை நடைபெற்று முடிவுற்றுள்ளது. 

தொடர்ந்து தெற்கு தாமரைக்குளம் கிராம நிலவுடைமையாளர்களுக்கு அவர்களது நிலத்திற்கு மறுநிலஅவையின் படி புதிய புல எண் வழங்கப்பட்டு அதன் பரப்பு, எல்லை மற்றும் பக்க அளவுகளுடன் கூடிய 9(2) நோட்டீஸ் ஆனது மறுநிலஅளவை பணியாளர்களை கொண்டு மார்ச் 2025 முதல் சார்வு செய்யப்பட உள்ளது. மேற்படி 9(2) நோட்டீஸ் சார்பு செய்யும் நபர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது தெற்கு தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த நிலவுடைமையாளர்கள் 9 (2) நோட்டீஸ் கிடைக்கப்பெற வில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மறுநில அளவை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்படி 9(2) நோட்டீஸில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் அதனை நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆய்வாளர், மறு நிலஅளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில் முகவரியில் மனு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory