» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது: திருநள்ளாறு கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

செவ்வாய் 25, மார்ச் 2025 10:16:31 AM (IST)

சனிப்பெயர்ச்சி மார்ச் 29-ந் தேதி நிகழாது என திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "பாரம்பரிய கணிப்பு முறைப்படி நடப்பு 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது 2026-ம் ஆண்டுதான் நிகழும். இது தொடர்பான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory