» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்தை பின் தொடர்ந்து ஓடிய பிளஸ் 2 மாணவி : நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!

செவ்வாய் 25, மார்ச் 2025 11:41:09 AM (IST)



வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தக்கோட்டை கிராமம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் சென்ற அரசு பேருந்து கோத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அப்போது பேருந்துக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவி தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து ஓடியுள்ளார். சிறிது தூரம் ஓடிய நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு மாணவி ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது போக்குவரத்துக்கழகம் சார்பில், அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் முனிராஜ் என்பவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆம்பூர் பணிமனையை சேர்ந்த முனிராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணியில் இருந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் அவரையும் பணியில் இருந்து விடுவிக்க சம்பத்தப்பட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

kannanMar 25, 2025 - 02:48:17 PM | Posted IP 172.7*****

DISMISS SEIYAVUM

மக்கள்Mar 25, 2025 - 11:53:51 AM | Posted IP 162.1*****

driving license ஐயும் சஸ்பெண்ட் பண்ணுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory