» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!
செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கால்வாய்கள் அகலப்படுத்த மற்றும் சீரமைக்க சட்டசபையில் ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். குறிப்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையினை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை பார்வையிட சின்னமுட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையமாக கொண்டு ரூ.2722 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சின்ன முட்டத்திலிருந்து திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள்.
மேலும் நெல், தென்னை, வண்ண வண்ண பூக்கள், வாழை மரங்கள் பயிர் செய்திட நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 24.03.2025 அன்று சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட உண்ணாமலைக்கடை வழியாக செல்லும் பட்டணம்கால் பிரதானக்கால்வாயில் 288 மீட்டர் நீளத்திற்கு மூடுகால்வாய் அமைப்பதற்கு ரு.4.72 கோடி மதிப்பிலும், கல்குளம் வட்டம் திக்கணங்கோடு கால்வாயிலும் மூடுகால்வாய் அமைப்பதற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
மேலும் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரணியல் கிளைக்கால்வாய் மற்றும் அதன் பகிர்மான வாய்க்கால்களை புனரமைக்கும் பணிக்கு ரூ.6 கோடி மதிப்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தொடர்ந்து திருவட்டார் வட்டம் அருவிக்கரை மாத்தூர் தொட்டிபாலம் புனரமைக்கும் பணிக்கு ரூ.60 இலட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை உடனடியாக ஏற்று ரூ.13.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்களுக்கும், உதவி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தர்பூசணி பழம் குறித்த மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:47:42 PM (IST)

ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி வீட்டை முடக்குவதா? பிரபு கைவிரிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:41:03 PM (IST)

தெரு நாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி மதிப்பில் திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:25:09 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:49:04 PM (IST)

வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் - முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:40:37 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)
