» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அரசாணை வெளியீடு

திங்கள் 31, மார்ச் 2025 8:18:46 AM (IST)

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மேலும் 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, சமீபத்தில் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு (தஞ்சை மாவட்டம்) ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன.

அந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி, போளூர், செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), சங்ககிரி (சேலம் மாவட்டம்), கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் இங்கு பாதாள சாக்கடை வசதி, சுகாதாரமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதேவேளையில் சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்டவை உயரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory