» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புதன் 2, ஏப்ரல் 2025 3:30:52 PM (IST)

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் "1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும், அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது. 1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது என குறிப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: அந்த கடிதத்தில், "மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயத்தைச் சுற்றியுள்ள பிரச்சனை குறித்த எங்கள் குறிப்பாணையை வழங்க, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்டுள்ளேன். இது சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களைத் தொடர்ந்து நடக்கிறது.

முன்னர் குறிப்பிட்டது போல, எங்கள் மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory