» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!

புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)



குமரி மாவட்டத்தில் சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவில் உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமல ராணி. கிராம உதவியாளர் பேபி. நெய்யூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மகன் ஆறுமுகம் (56) என்பவர் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று வேண்டி தனது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்து உள்ளார். 

சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்து அதன் பின்னர் ஆர்ஐ பரிந்துரை செய்த பின்னர் தாசில்தார் அலுவலகம் மூலமாக சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்து முதலில் எழுத வேண்டியது கிராம நிர்வாக அலுவலர் ஆகும். அதனால் கிராம நிர்வாக அலுவலர் மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்தபோது முப்பது ஆயிரம் ரூபாய் மதிப்பு சொத்து சான்றிதழ் பெற பரிந்துரைக்க முடியும் என்று கூறி அதற்கு நான்காயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளார். 

பேரம் பேசி 3000 ரூபாய் தந்தால் முப்பது ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று கறாராக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். புகாரின் படி வழக்குப்பதிவு செய்த குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று இன்று காலை சுமார் 11:30 மணி அளவில் பதுங்கி இருந்தனர். 

அப்போது ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரரான ஆறுமுகம் கொடுக்கும்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் பேபியிடம் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கூறவே அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் வேண்டுகோள் படி கிராம உதவியாளர் பேபி வாங்கும்போது மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன் துரை லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவி உடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். 30ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய ரூ.3ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Apr 2, 2025 - 07:41:04 PM | Posted IP 172.7*****

இவர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory