» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்சியில் இளைஞர் வானவியல் விண்வெளி அறிவியல் மாநாடு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம்!
திங்கள் 31, மார்ச் 2025 7:53:07 PM (IST)

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதில் 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜீன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
திருச்சியில் நடந்த வானவியல் மாநாடு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.ராமன் ரிச்சர்ச் பவுண்டேசன் தலைவர் ரவிச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா அனைவரையும் வரவேற்றார்.
டாஸ் மாநில பொதுச் செயலாளர் மனோகர் வானவியல் மாநாடு குறித்து நோக்கவுரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் ரவிக்குமார், ஜோஸ்பின் பிரபா, நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன், சிட்டிசன் சயின்டிஸ்ட் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு 17 முதல் 22 வயதுள்ள இளைஞர்கள் வானவியல் மாநாட்டில் சமர்பிக்க வேண்டிய ஆய்வு கட்டுரைகள், போஸ்டர்கள் மற்றும் வானவியல் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து செயல்விளக்கத்துடன் பேசினர்.
இதில் மூத்த வழக்கறிஞர் மார்டின் கலந்து கொண்டு வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வு அட்டைகள், செய்முறை அறிவியல் கருவிகள் வழங்கி பேசினார். இதில் டாஸ் நிர்வாகிகள் சாந்தி, ஜெகதீஸ்வரன், ரமேஷ், சக்திவேல், சொக்கநாதன் உள்பட பேராசிரியர்கள், டாஸ் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருநெல்வேலி டாஸ் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.
இதில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு https://forms.gle/QuwZdNMLKaH49oD8 இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளர் மீது புகார்
புதன் 2, ஏப்ரல் 2025 5:12:31 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!!
புதன் 2, ஏப்ரல் 2025 4:03:49 PM (IST)

கச்சத் தீவை மீட்கக் கோரி முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமி
புதன் 2, ஏப்ரல் 2025 3:43:41 PM (IST)

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதன் 2, ஏப்ரல் 2025 3:30:52 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
