» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் 15-ல் குரூப் 1, 1ஏ தேர்வு: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:17:47 AM (IST)

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory