» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோவாளை வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனாஆய்வு

புதன் 16, ஏப்ரல் 2025 3:30:21 PM (IST)



தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (16.04.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடுவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித்தர முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம் வழங்கப்படவுள்ளது. இன்று முதற்கட்டமாக செண்பகராமன்புதூர் பகுதியில் பழுதடைந்த வீடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியானவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செண்பகராமன்புதூர் புதுக்குளம் தூர்வாரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆதிச்சன்புதூர் அங்கன்வாடி மையத்தில் பொருட்கள் வைக்கும் இடம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், குழந்தைகளுக்கான கழிப்பறை, குடிநீர் வசதி, உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory