» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய போராளிகளில் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என நமது மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அதில் மிக முக்கியமான சுதந்திர போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் . பெருந்தலைவர் காமராஜரின் வழி நடந்து காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய தலைவராக விளங்கியவர் அவர்.
ஒரு தலைசிறந்த வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன்னே திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு இரண்டு முறையும், பின்னர் தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு முறையும் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மிக சிறப்பாக செயல்பட்டார்,
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் திரு பொன்னப்ப நாடார் . அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வழக்குகளை சந்தித்த தியாகிகளுக்கு நீதிமன்றங்களில் துணை நின்றவர் அவர்.
குமரி மண்ணிற்கும் மக்களுக்கும் தனது பணிகள் வாயிலாக புகழ் சேர்த்த திரு, பொன்னப்ப நாடார் அவர்களுக்கு ஒரு சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்திருப்பது குமரி மக்களை மகிழ்ச்சிக்குள் ஆக்கும் செய்தி. குமரி மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றி.
இத்தகைய தலைவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். இளம் தலைமுறையினர் இவர்களை குறித்து அறிந்து நினைவு கூர அவர்களுக்கென்ற அடையாளங்கள் தேவை. அதனை பூர்த்தி செய்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கன்னியாகுமரி மக்கள் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!
சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)
