» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம்: ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 17, ஏப்ரல் 2025 8:48:08 AM (IST)

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்த நிலையில் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மனைவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தோம். ஆனால் அவருக்கு இந்த ஆபரேஷனை டாக்டர்கள் முறையாக செய்யவில்லை. இதனால் அவர் மீண்டும் கர்ப்பிணி ஆனார். எனவே கவனக்குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மருத்துவமனை டாக்டர் சார்பில் ஆஜரான வக்கீல், சில பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பின்பு கருப்பை குழாய் மீண்டும் வளர்ந்துவிடும். இதனால் மீண்டும் கருவுற வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆபரேஷனை குறை கூற இயலாது என வாதாடினார்.

விசாரணை முடிவில். கருத்தடை சிகிச்சை தோல்வியுறும்போது இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை பெற மனுதாரர் குடும்பத்தினருக்கு தகுதி உள்ளது. எனவே ரூ.60 ஆயிரம் இழப்பீட்டு தொகையை மனுதாரருக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory