» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு

வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)



செண்பகராமன்புதூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன்புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் வரும் நடப்பு கல்வியாண்டு 2025-2026ம் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்காக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு இன்று (16.04.2025) நடைபெற்றது.

இப்பேரணியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசுப்பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் பள்ளிகல்வித்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 
இன்று செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப பள்ளியின் சார்பில் மாணவர் சேர்க்கை பேரணியில் கலந்துகொண்டு, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேசும்பொழுது தமிழ்நாடு அரசால் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறிப்பாக விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், நான்கு இணை சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், காலணிகள், நிலவரைப்படம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, 

ஆதிதிராவிட நல ஊக்கத்தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்டப சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறித்தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, கோவிட்-19ல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை, 

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, ஸ்மார்ட் வகுப்பறை, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பொங்கல், ரவ கேசரி, கிச்சடி உணவுகள், மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்ய தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory