» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: மேல்மருவத்தூர் அருகே சோகம்

ஞாயிறு 4, மே 2025 8:55:02 PM (IST)

மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு  தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே  அகிலி பகுதியை சேர்ந்த  ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (17)  நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு  எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில்  நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.  இந்நிலையில் இன்று  செங்கல்பட்டு மாவட்டத்தில்  6 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.  

மாணவி வழக்கம் போல் நேற்று இரவு படுக்கை அறைக்கு சென்று உள்ளார். இன்று தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவர் தாயார்  காலை நான்கு மணிக்கு மகளை எழுப்புவதற்காக மாணவி  அறைக்கு சென்றுள்ளார்.  அப்போது அப்பொழுது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

அங்கு வந்த போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார  என மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory