» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் : அர்ச்சகர்கள் வலியுறுத்தல்!

செவ்வாய் 6, மே 2025 5:55:57 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஜூலை 7ம்தேதி மதியம் 12.05 மணிக்கு மேல் நடத்தவேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக விதாயகர்தர் சிவசாமி சாஸ்திரிகள், ஸ்தஸ்தாப் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, சைங்கரிய சபை தலைவர் ஆனந்தய ஐயர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்த கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து விட்டு வருகின்றன. வருகிற ஜூலை மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் தொடர்பாக கடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜூலை மாதம் ஏழாம் தேதி காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த உகந்த நேரம் என விதாயகர்தர் சிவசாமி சாஸ்திரிகள் குறித்துக் கொடுத்தார். 

ஆனால் தற்போது புதிய பஞ்சாங்கத்தின் படி கும்பாபிஷேகத்தை ஜூலை 7ஆம் தேதி மதியம் 12.05 மணிக்கு மேல் 12.47 மணிக்குள் நடத்த முடிக்க வேண்டும் என சிவசாமி சாஸ்திரிகள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நேரத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லதாக இருக்கும் என அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory