» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03% ஆகும். பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16% பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அதேநேரம் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். இரு கைகளையும் இழந்த இவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தார்.
அவர் கூறியதாவது; மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் எனக்கு உதவினால் என்னை போன்று உள்ளவர்களுக்கு நான் உதவ விருப்பப்படுகிறேன் என கூறிய மாணவன், இதற்கு முதல்வர் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாணவன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இரு கைகளையும் இழந்த கிருஷ்ணகிரி மாணவர் கீர்த்தி வர்மாவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)

பாமக மாநாட்டிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 8, மே 2025 11:10:17 AM (IST)
