» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டில் சேரலாம்: தமிழக அரசு

வியாழன் 15, மே 2025 8:10:39 PM (IST)

12-ம் வகுப்பில் எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர முடியும் என தமிழக தொழில்நுட்ப இயக்ககம் அறிவித்துளது. 

2025-2026 கல்வி ஆண்டில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய 3 பாடங்கள் இருக்கும் குரூப் படித்தவர்கள்தான் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர முடியும். இல்லையென்றால் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழக தொழில்நுட்ப இயக்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பில் எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory