» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி!
திங்கள் 26, மே 2025 8:20:45 AM (IST)

உடன்குடி அருகே செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற மேலாளரான இவா், தனது குடும்பத்துடன் செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா்.
அவா்கள் நேமிசம் செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா். இதற்காக அவா்கள் நகைகளைக் கழற்றி பையில் வைத்திருந்தனா். இரவில் பாா்த்தபோது 15 பவுன் நகையைக் காணவில்லை. கோயில் வளாகம் முழுக்க தேடியும் கிடைக்கவில்லை.
உடன்குடி சிதம்பரத் தெருவைச் சோ்ந்த காதா் மீரா சாகிப் என்பவா் சைக்கிளில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். அவா் கோயில் வளாகத்தில் கிடந்த 15 பவுன் நகையைக் கண்டெடுத்து கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். அவா் மூலமாகவே ரகுநாதன் குடும்பத்தினரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
காதா் மீரா சாகிப்பின் நோ்மையை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மகேஸ்வரன், முன்னாள் தலைவா் சீனிவாசன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் பாராட்டினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)
