» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உதட்டிற்கு பதில் மர்ம உறுப்பில் ஆபரேஷன்: மருத்துவமனையில் பொதுமக்கள் முற்றுகை!
திங்கள் 26, மே 2025 10:31:43 AM (IST)
சென்னையில் சிறுவனின் உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மர்ம உறுப்பில் ஆபரேஷன் செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிறுவன் தனது பெற்றோரிடம் அதை காண்பித்து கதறி அழுதான். உடனே பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஐஸ்அவுஸ் போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர். ஆபரேசன் செய்த மருத்துவரிடம் விசாரித்தபோது, அவர் தான் சரியான ஆபரேசனை செய்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மர்ம உறுப்பில் ஏன் ஆபரேஷன் செய்தார் என்பது கேள்விக்குறியானது.
ஆபரேசனுக்கு உறுதுணையாக இருந்த செவிலியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஐஸ்அவுஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவர், செவிலியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)
