» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
செவ்வாய் 3, ஜூன் 2025 10:30:11 AM (IST)
கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். வீட்டின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்!
வியாழன் 5, ஜூன் 2025 10:35:47 AM (IST)

பெங்களூருவில் கூட்டநெரிசலில் 5 தமிழர்கள் உட்பட 11பேர் பலி : எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வியாழன் 5, ஜூன் 2025 10:32:23 AM (IST)

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)
