» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இணையும்: எடப்பாடி பழனிசாமி தகவல்
ஞாயிறு 8, ஜூன் 2025 12:36:35 PM (IST)
அதிமுக கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து, திருமண நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.மக்களைப் பற்றி கவலை ஸ்டாலினுக்கு இல்லை. வருகிற 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மேலும், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகளும் மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சாரும்.
திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அதனையும் கிடப்பிலேயே போட்டு விடுவார்கள். அதிமுக ஏற்கெனவே அறிவித்த திட்டங்களையும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வருவார்கள். திமுகவின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். 2010 ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் : அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:25:22 AM (IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)


