» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சனி 14, ஜூன் 2025 4:04:48 PM (IST)



பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். 

தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளராக இருந்தவர் கே.ஆர். வெங்கடேஷ். இவர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory