» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மல்லர் கம்பத்தில் சாகசம் புரிந்த மாற்றுத்திறனாளிகள் : பார்வையாளர்கள் உற்சாகம்!
சனி 14, ஜூன் 2025 8:08:41 PM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழாவில் மல்லர் கம்பத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் சாகசம் புரிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலைவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ல் கோலாகலமாகத் தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் கலைத் திருவிழாவை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மகளிர் ஆணையத் தலைவி குமாரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் மதுபாலன், துணை பொறியாளர் சரவணன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், வட்டச் செயலாளர் கதிரேசன் உட்பட பலர் கொண்டனர்.
கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இவ்விழாவில் பாரம்பரியம்மிக்க மண்சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விழா மைதானத்தில் உணவுத்திருவிழா, கைவினைப்பொருட்கள் கண்காட்சி போன்றவையும் நடந்து வருகிறது. நெய்தல் கலைவிழாவின் 2-வது நாள் கலைவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநயகீதம் பல்சுவை கலைநிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையம் - பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் சந்திப்பு (ஜங்ஷன்) இசைக்குழு - ஒளி இசை இசைக்குழு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மல்லர் கம்பத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் செய்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நெய்தல் கலைவிழாவின் நிறைவு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி - மங்கள இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு - பல்வகை நாட்டுப்புற இசை, அந்தியூர் கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு, உருபாணர் - பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு - நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி - நாட்டுப்புற மற்றும் ஒளி இசை இசைக்குழு - அந்தோணிதாசன் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க. போராட்டம் : காவல்துறை அனுமதி!
திங்கள் 7, ஜூலை 2025 5:38:08 PM (IST)

சாலை, மேம்பாலப் பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
திங்கள் 7, ஜூலை 2025 4:43:39 PM (IST)

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்
திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் இபிஎஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 12:43:17 PM (IST)

போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு: நீங்கள் யார் என்று கேட்ட டிரைவர், கண்டக்டர்!
திங்கள் 7, ஜூலை 2025 10:43:38 AM (IST)

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: அன்புமணி தாக்கு...!
திங்கள் 7, ஜூலை 2025 10:29:17 AM (IST)
