» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்
திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)

தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியில் கோசண்டு மகன் செல்லத்தேவர் என்பவர் இறந்த வீட்டில் அடக்கத்திற்காக இறுதி ஊர்வலம் செல்லும் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி காற்றில் பறந்து அருகில் இருந்த அங்குசாமி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் வைக்கோல் படப்பு தவிர வேறெந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க. போராட்டம் : காவல்துறை அனுமதி!
திங்கள் 7, ஜூலை 2025 5:38:08 PM (IST)

சாலை, மேம்பாலப் பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
திங்கள் 7, ஜூலை 2025 4:43:39 PM (IST)

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் இபிஎஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 12:43:17 PM (IST)

போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு: நீங்கள் யார் என்று கேட்ட டிரைவர், கண்டக்டர்!
திங்கள் 7, ஜூலை 2025 10:43:38 AM (IST)

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: அன்புமணி தாக்கு...!
திங்கள் 7, ஜூலை 2025 10:29:17 AM (IST)

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 7, ஜூலை 2025 9:01:15 AM (IST)
