» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் இபிஎஸ்!

திங்கள் 7, ஜூலை 2025 12:43:17 PM (IST)



மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார்.

இசட் பிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார். இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார்.

மேற்குறிப்பிட்ட 5 இடங்களிலும் மக்களைச் சந்தித்து, பிரசார வாகனத்தில் இருந்தவாறே எடப்பாடி பழனிசாமி உரையாற்றவுள்ளார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற அவரின் பிரசாரப் பயணம் ஜூலை 23ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நிறைவடைகிறது.

அதேநேரத்தில், 2024 மக்களவைத் தோ்தல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஒரு வெற்றிக்கான எழுச்சியை எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசாரம் ஏற்படுத்துமா என்பதை அரசியல் நோக்கா்கள் கூா்ந்து கவனித்து வருகிறாா்கள்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 7, 2025 - 03:34:54 PM | Posted IP 104.2*****

மொதல்ல குஜராத் மார்வாடிகளிடம் இவனுக அடகு வைத்த அதிமுகவை மீட்கவேண்டும். மொத்தத்தில் மகன் மிதுனை காப்போம். சம்பந்தியை மீட்போம் இப்படி சொன்னாதான் சரியா இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory