» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சன் டிவி பங்கு ஊழல் குறித்து மக்களிடம் பதில் அளிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சனி 21, ஜூன் 2025 12:16:21 PM (IST)

சன் டிவி பங்கு ஊழல் குறித்து மக்களிடம் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வழக்கமாக கோபாலபுரம் குடும்பத்தினர் மற்றும் அவர்களது கூட்டாளிகள், தங்கள் மீதான ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.

இந்த முறை கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தி அவர்களில் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை (கோபாலபுரம் குடும்பத்தின் பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த மோசடி மூலம் ரூ.6,381 கோடி அளவுக்கு ஈவுத்தொகையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது வெறும் ஊழல் அல்ல. இது கோபாலபுர குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு. இவர்கள் மக்களிடம் பதில் அளிக்க வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory