» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

"உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, 06 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2025), கடலூர் மாவட்டம், சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்திலிருந்து "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சத்யபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சிறப்பு திட்ட முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து துவக்கி வைத்தார்கள்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு / இணையவழி பட்டா / பட்டாவில் பெயர் மற்றும் பரப்பு திருத்தம்/ நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்று, ஓபிசி சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ், காலதாமத பிறப்பு/இறப்பு பதிவு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, திருமணமாகாத பெண்கள் உதவித்தொகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபடம் அனுமதி, சொத்துவரி, சொத்துவரி பெயர் மாற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக தொழில் வரிவிதிப்பு / புதிய தொழில் உரிமம்/ புதுப்பித்தல், குடிநீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பிறப்பு சான்று, இறப்பு சான்று, புதிய சொத்து / காலிமனை வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, தெருவோர வியாபாரிகள் அடையாள அட்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக சேருதல் (CMCHIS), எரிசக்தித்துறை சார்பாக மின்கட்டண பெயர் (Name Transfer) மின் கட்டண மாற்றம் (Tariff Change), வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் சுமை,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், கூட்டுறவு சங்கம்/ வங்கி மூலம் கடனுதவி (சுய தொழில் கடன், கால்நடை பராமரிப்பு கடன்), மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (NIDC / UDID), மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக்கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) (தொழில் முனைவோர் / சுய உதவிக்குழுக் கடன்), இணையவழி வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை (பள்ளிபடிப்பு /கல்லூரிப்படிப்பு), தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் (புதிய உறுப்பினராக பதிவு செய்தல் / நலத்திட்ட உதவிகள் பெறுதல்), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) கடனுதவிகள் (தனிநபர் கடன்/ குழு கடன்/ கறவை மாட்டுக்கடன் திட்டம் / சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிக்கு கடன் வழங்கும் திட்டம் ) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) கடனுதவிகள் (தனிநபர் கடன் / கைவினைக் கலைஞர் கடன் / சுய உதவிக் குழுக் கடன்/ கல்விக்கடன்), கல்வி உதவித்தொகை (பள்ளிப்படிப்பு / கல்லூரிப் படிப்பு),
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நலவாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல், உதவித்தொகை, ஓய்வூதியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டிடம் / மனைப்பிரிவு வரைபடம் திட்ட அனுமதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), கலைஞர் கைவினைத் திட்டம் (KKT), வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக சிறிய அளவிலான நாட்டுக் கோழிப் பண்ணைகள் நிறுவும் திட்டம், கருவுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு 50 % மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்குதல், மீனவ இளைஞர்கள் கடல்சார் கல்வி பயில உதவித்தொகை வழங்குதல், உள்நாட்டு மீனவர்களுக்கு 50 % மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல், புதிய மீன் வளர்ப்பு குளங்களின் கட்டுமானம், ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு (நன்னீர் அலங்கார மீன்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் வளர்த்தல்), குளிரூட்டப்பட்ட வாகனங்கள்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி ஆதரவுத் திட்டம், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக வேளாண் இடுபொருட்கள் (விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை, உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், நடவுப் பொருட்கள் போன்றவை), நுண்ணீர்பாசனம், வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் மானியத்தில் வழங்குதல், இ-வாடகை சேவை (வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை), தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ஆதார் சேவைகள் (புதிய ஆதார் அட்டை வழங்குதல் / பெயர் சேர்த்தல்), சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக வழங்கப்படும் சேவைகளின் கீழ் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் இம்முகாமில் பெறப்பட்டது.
மேலும், இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள /விடுப்பட்ட மகளிர்கள் விண்ணப்பிப்பதற்காக தனியாக சிறப்பு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இம்முகாமில் விண்ணப்பித்த உடனே 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் 05 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைபேசிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மேயர் பெ.ஜெகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) விஜயலட்சுமி, கோவில்பட்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)
