» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் சேலத்தில் படுகொலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றுள்ளார். உள்ளூர் பகுதிகளில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தால் சட்ட ஒழுங்கு சீர்கேடும் என நினைத்த நீதிமன்றம் வெளியூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் கையெழுத்து போட வந்த மதன்குமார் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்பொழுது சேலம் மணக்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சேலம் மாநகரின் மையப் பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)


