» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, யானை, மான்கள் மற்றும் மனித குரங்கு உள்பட பல விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. இவைகளை கண்டு ரசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், பூங்காவில் மஞ்சள் அனகோண்டா பாம்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பாம்பு நேற்று காலை 10 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த மஞ்சள் நிற அனகோண்டா கடந்தாண்டு 9 குட்டிகளை ஈன்றது. இங்குள்ள மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றது. தற்போது மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனகோண்டா குட்டிகளை தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அதிகாரிகள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:12:38 PM (IST)
