» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்

புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)

கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பொட்டல்குளம் அருகே உள்ள குருசடி குளம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஐயப்பன் (33) என்பவர் கடந்த 11 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பொட்டல்குளம் பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஆதிஷ்ரா (22), சக்தி(19), அஜய்(21), கொட்டாரத்தை சேர்ந்த ஆறுமுகம்(19) மற்றும் பரமாத்மா லிங்க புரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 5பேர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ரஸ்தக்காடு பகுதி புதரில் மறைந்திருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரித்ததில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக அய்யப்பனை 5பேரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory