» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 (வியாழன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
(2) 24.07.2025 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 ஆகஸ்ட் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (09.08.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 24.07.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது
புதன் 16, ஜூலை 2025 5:28:18 PM (IST)

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட விவகாரம்: 77 வயது மருத்துவர் கைது
புதன் 16, ஜூலை 2025 5:05:17 PM (IST)

ஆயுத பூஜை, விஜயதசமி : இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக துவக்கம்!
புதன் 16, ஜூலை 2025 3:54:25 PM (IST)

புதிய பயணம் தொடக்கம் : நண்பர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்..!
புதன் 16, ஜூலை 2025 12:30:22 PM (IST)

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 16, ஜூலை 2025 11:55:08 AM (IST)

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்!
புதன் 16, ஜூலை 2025 11:18:18 AM (IST)
