» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்: தமிழ்நாடு அரசு

புதன் 16, ஜூலை 2025 11:15:21 AM (IST)

அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக அள ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory