» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய பயணம் தொடக்கம் : நண்பர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்..!

புதன் 16, ஜூலை 2025 12:30:22 PM (IST)



வருகிற 25ஆம் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது தொடர்பாக கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் "புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்" எனப் பதிவிட்டு, படங்களையும் பதிவிட்டுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது. மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்படி ஒரு இடத்தை வழங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory