» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:30:23 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 18 கிராம ஊராட்சிகளில் நடந்தது. 

இதில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜுலை - 28ம் தேதி முதல் ஆகஸ்ட் - 01ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகதணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இடைசெவல் கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமிதா, சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊராட்சி செயலர் ஆதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இதில் தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் கிராம வள பயிற்றுநர்கள் சுதா, சுகன்யா, முனியராஜலட்சுமி, கெளசல்யா பணித்தளப் பொருப்பாளர்கள், உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.  இதேபோல் கோவில்பட்டி ஒன்றியம் சத்திரப்பட்டி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


மக்கள் கருத்து

m.sundaramAug 1, 2025 - 07:22:38 PM | Posted IP 104.2*****

All are conducted as formalities. No records are seemed to placed before the GS meeting. Most of the beneficiaries simply sign the papers without knowing the factual contents. This exercise if only formality

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory