» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தகவல்

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:50:20 PM (IST)

தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவநாத சுவாமி திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் திருமண மஹாலில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். 

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த வரியை மத்திய அரசிடம் பேசி 12 சதவீதமாக குறைத்தோம். தீப்பெட்டிக்கு நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம். கோவில்பட்டி என்று சொன்னாலே கடலை மிட்டாய் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெயர் போன ஊர். கோவில்பட்டியில் தயாரிக்கபடும் கடலை மிட்டாய் பெயரை மற்ற இடங்களில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் தரம் குறைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தனர். இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்களுக்கான ஒரு லேபிளை தயார் செய்து வெளியே விற்பனை செய்ய முயற்சிக்கலாம்." என்றார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory