» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஸ்ரீதுர்க்கை அம்பிகை வருஷாபிஷேக விழா

வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 4:10:23 PM (IST)



தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 54வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று இரவு 6.30 மணி முதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. இன்று காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம், கும்பாபிஷேகம், நடைபெற்றது. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், ஜெயலட்சுமி, நடராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஸ்ரீ ஜலதுர்க்கா வார வழிபாடு அமைப்பாளர் ஜெய ராணி, செயலாளர் பெத்தனாட்சி, பொருளாளர் விஜயா,மற்றும் நிர்வாகிகள் அனுராதா,சாரதா,பொன்னி,சுமதி, ராஜ புஷ்பம், பிச்சம்மாள், ஜெயந்தி, ஜெயலட்சுமி,துர்கா,அனு தேவி, சந்திரலேகா, அலமேலு, இசக்கி அம்மாள், பாலச்சந்திரா, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory