» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசின் வெற்று விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி: நயினார் நாகேந்திரன் கருத்து
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 4:58:41 PM (IST)
திமுக அரசின் வெற்று விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் திட்டமா, கட்சி விளம்பரமா? நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்! தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் "ஸ்டாலின்" பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது. மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் "ஸ்டாலின்" என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:55:08 AM (IST)

பெற்றோர்களை கௌரவமாக நடத்த வேண்டும் : அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:29:29 AM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது : எடப்பாடி பழனிசாமி பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 8:57:53 AM (IST)

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சனி 2, ஆகஸ்ட் 2025 8:47:15 AM (IST)

தி.மலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)
